Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 ஜனவரி (ஹி.ச.)
புது டெல்லியின் பல பாகங்களிலும் சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து தாங்க முடியாத அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது.
மாநகரின் பல இடங்களிலும் குறைந்தபட்ச வெப்ப அளவு மூன்றே டிகிரி என்கிற அளவுக்கு சரிந்து காணப்படுகிறது.
பாலம், சப்தர்ஜங், டெல்லி-என்.சி.ஆர், இந்தியா கேட் உட்பட பல நகரங்களும் இதனால் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கின்றன.
அதோடு மட்டுமல்லாமல், முக்கியமான நகரங்களில் காற்று மாசுபாடு எல்லை மீறி அதிகரித்துள்ளது.
வானிலை தெளிவாக இல்லாததால் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சில விமானங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் கால தாமதம் ஆகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி, டொரண்டோ, துபாய், மான்செஸ்டர், லண்டன், பாங்காக், பிளிசி, பாகு, கெய்ரோ, மிலன், கோபன்ஹேகன் போன்ற முக்கியமான வெளிநாட்டு நகரங்களிலிருந்து டெல்லிக்கு வரவிருக்கும் விமானங்கள் தாமதமாக வர வாய்ப்புள்ளது. ஆகவே, இதனால் தொந்தரவுகள் உண்டாகலாம் எனவும், பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆகையால், பயணிகள் அந்தந்த விமான சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு விமானங்களின் தற்போதைய நிலவரத்தை பற்றி விசாரித்து அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Hindusthan Samachar / JANAKI RAM