Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 ஜனவரி (ஹி.ச.)
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சிபிஐக்கு
மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் அலுவலகம் அமைத்து கடந்த அக்டோபர் மாதம் முதல் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள், அப்பகுதி பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பணியில் இருந்த காவலர்கள், தமிழக வெற்றிக்கழக மாநில
நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மாவட்ட நிர்வாகிகள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு இடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஜனவரி மாதம் 12ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக
வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் நேரில் ஆஜராகி கரூர் சம்பவம்
குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ள நிலையில் கரூர் சிபிஐ அலுவலகத்தில்
நாள்தோறும் பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பணியில் இருந்த 6 காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக
நேரில் ஆஜராகினர்.
மீண்டும் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் வருகின்ற 19ஆம் தேதி டெல்லி
சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சமன் வழங்கியுள்ள நிலையில், தற்போது
நாள்தோறும் தனது விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam