Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 17 ஜனவரி (ஹி.ச.)
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட கருவாரக்குண்டு பகுதியைச்
சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு
படித்து வந்தார்.
இவர் வழக்கம் போல் நேற்று முன் தினம் பள்ளிக்கு சீருடை அணிந்து
புறப்பட்டார். மாலையில் வெகுநேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பள்ளியில் ஆசிரியர்களிடம் விசாரித்தனர்.
அப்போது, சிறுமி பள்ளிக்கு
செல்லவில்லை என்பது தெரிய வந்தது உடனடியாக சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வட்டார பகுதிகள் முழுவதும் தேடினர்.
இதற்கிடையே நீண்ட நேரமாக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த சிறுமியின் செல்போனிலிருந்து மாலை 6 மணிக்கு சிறுமி தனது தாயாரை தொடர்பு கொண்டு தன்னை தேட வேண்டாம் என்று விரைந்து வீட்டுக்கு வருவதாகவும் கூறியுள்ளார். எங்கே இருக்கிறாய் என தாயார் கேட்ட கேள்விக்கு வீட்டின் அருகிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் செல்போன்
ஸ்விட்ச் ஆஃப் ஆனது. பின்னர் போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பின்னரும்
சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், ஏற்கனவே பல
நாட்கள் சிறுமியை பின்தொடர்ந்து சென்று தொல்லை அளித்து வந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவனான 16 வயது சிறுவன் மீது சந்தேகம் எழுந்தது. உடனடியாக போலீசார் அந்த சிறுவனை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சிறுமியை அந்த சிறுவன் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான். பள்ளிக்கு
செல்லாமல் சிறுமியை அழைத்துக் கொண்டு வாணியம்பலம் பகுதிக்கு சென்றதாகவும் சிறுமியை அந்த சிறுவன் பலாத்காரம் செய்த நிலையில், அது குறித்து சிறுமி தன் தாயாரிடம் தெரிவிப்பேன் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியை மூச்சு
திணற வைத்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாக கூறியுள்ளான். தொடர்ந்து அவனை அழைத்து சென்று
கருவாரக்குண்டு பகுதியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே முட்புதர்களுக்கு இடையே சிறுமியின் சடலம் கிடப்பதாக சிறுவன் கூறியதன்படி சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் கைகள் துணியால்
கட்டப்பட்ட நிலையில் கழுத்தில் காயங்கள் காணப்பட்டன.
போலீசார் சடலத்தை
கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
14 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததோடு கழுத்தை நெரித்தும் மூச்சுத் திணற வைத்தும் கொலை
செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam