Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)
தமிழக முன்னாள் முதலவரும் புகழ்பெற்ற நடிகருமான மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவரை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b