Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 17 ஜனவரி (ஹி.ச.)
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காணும் பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம், அதன்படி இன்று போலீசாரின் அனுமதியின்றி கொண்டையம்பள்ளி, செந்தாரப்பட்டி ஆகிய கிராமங்களில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.
இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாடுகள் அவிழ்க்கப்பட்டு மஞ்சுவிரட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. குறிப்பாக புகழ்பெற்ற தம்மம்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
அப்போது வாடிவாசலில் இருந்து அவிழ்த்து
விடப்பட்ட மாடு ஒன்று கொண்டையம்பள்ளி கிராமம் குடியிருப்பு பகுதியில்
நுழைந்துள்ளது. அப்போது கொண்டையம்பள்ளி வடக்கு தெருவில் வசிக்கும் வினிதா
வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அச்சமயம் திடீரென மிரண்டு போன மாடு வினிதாவின் வயிற்று பகுதியில் குத்தி தூக்கி எரிந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த வினிதாவை மீட்டு
சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் வினிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதே போல்
செந்தாரப்பட்டி தெற்கு சத்திர தெருவில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின் போது வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட மாடு அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 22)
என்பவரின் நெஞ்சு பகுதியில் குத்தி தூக்கி எரிந்ததில் படுகாயம் அடைந்தார்.
படுகாயமடைந்தவரை
மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
கானும் பொங்கல் பண்டிகையையொட்டி அனுமதியின்றி நடைபெற்ற
மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இருவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam