பிரதமர் வருகைக்காக பிரதமர் புகைப்படத்துடன் டிடிவி தினகரன் புகைப்படம் இணைத்து வைக்கப்பட்டிருந்த பேனர் -தற்போது டி.டி.வி. தினகரன் புகைப்படம் அகற்றம்
தமிழ்நாடு, 17 ஜனவரி (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி பிரதமா் மோடி பங்கேற்று பேசவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தையொட்டி அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் படத்துடன் பேனா் வைக்கப்பட்டிருந்தது அரசியல் களத
தேசிய ஜனநாயக கூட்டணி பேனர்


தமிழ்நாடு, 17 ஜனவரி (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி பிரதமா் மோடி பங்கேற்று பேசவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தையொட்டி அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் படத்துடன் பேனா் வைக்கப்பட்டிருந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்யும்படியில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக தனது தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இறக்கியது.

அதிமுக தலைமையான கூட்டணி ஓரளவிற்கு முழுமை பெற்றுள்ள நிலையில் இன்னும் சில கட்சிகள் இணைந்து கூட்டணி விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகளின் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கூட்டணி கட்சித் தலைவர்கள் படத்துடன் அதிமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரனின் புகைப்படம் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது புகைப்படம் அகற்றப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam