கல்லால் அடித்து இருவர் கொலை- 4 பேர் கைது
திருவள்ளூர், 17 ஜனவரி (ஹி.ச.) திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மர்ம நபர்கள் இளைஞர்களை கல்லால் தலையில் அடித்து கொலை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் பார்த்திபன் மற்றும் சுகுமார் ஆகியோர
கைது


திருவள்ளூர், 17 ஜனவரி (ஹி.ச.)

திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மர்ம நபர்கள் இளைஞர்களை கல்லால் தலையில் அடித்து கொலை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தில் பார்த்திபன் மற்றும் சுகுமார் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் கேசவமூர்த்தி என்ற இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நீலகண்டன், ஜோஷித், வினோத், ஜவகர் ஆகிய 4 பேரை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

இந்த 4 பேரும் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கிய போது சுகுமார் பார்த்திபன் கேசவமூர்த்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தை மெதுவாக இயக்க சொல்லியபோது ஆத்திரத்தில் கல்லால் அடித்து கொலை செய்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam