Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச)
பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திராவிட பொங்கல், சமத்துவ பொங்கல் என்றெல்லாம் கூக்குரலிடுபவர்களுக்கு காவல் துறையினர் திராவிடர்களாக, சமத்துவம் உள்ளவர்களாக தெரியவில்லையா? காவல் துறையினரை மனிதர்களாக நினைக்காமல், அவர்களுக்கும் விருப்புகள் உண்டு என்றெண்ணாமல், அவர்களை ஏவலாளிகளாக கருதும் ஆதிக்க மனப்பான்மை அகல வேண்டும்.
உடனடியாக பணியிட மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ