Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 ஜனவரி (ஹி.ச.)
வந்தே பாரத் ரயில் சேவையின் அமோக வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை களமிறக்க ரயில்வே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன.
இந் நிலையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் இன்று மேற்கு வங்காளத்தின் மால்டாவுக்கு விஜயம் செய்கிறார்.
அங்கு, ஹவுராவிலிருந்து அஸ்ஸாமின் கௌகாத்தி வரையிலான தேசத்தின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு சுமார் 3,250 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பலதரப்பட்ட சமுதாய நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
நாளை 18ஆம் தேதி ஹூக்ளி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 830 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதோடு மட்டுமல்லாமல், புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார்.
மேலும், நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், நியூ ஜல்பைகுரி - திருச்சி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உட்பட பல்வேறு ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி அவர்கள் ஆரம்பித்து வைக்க இருக்கிறார்.
அன்றைய தினம் அஸ்ஸாமில் நடைபெறும் பலவிதமான நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி அவர்கள் எண்ணற்ற சமுதாய நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM