பிரதமர் மோடி இன்று அசாம் பயணம் - சுமார் ரூ.6,950 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பு
கவுகாத்தி, 17 ஜனவரி (ஹி.ச.) பிரதமர் மோடி அவர்கள் அசாம் மாநிலத்தில் இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறார். இதில் பூமி பூஜை, போடோ பழங்குடியினரின் கண்கவர் நடன நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் இன்று அசாம் நோக்கி பயணி
பிரதமர் மோடி இன்று அசாம் பயணம் - சுமார் ரூ.6,950 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பு


கவுகாத்தி, 17 ஜனவரி (ஹி.ச.)

பிரதமர் மோடி அவர்கள் அசாம் மாநிலத்தில் இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறார்.

இதில் பூமி பூஜை, போடோ பழங்குடியினரின் கண்கவர் நடன நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் இன்று அசாம் நோக்கி பயணிக்கவுள்ளார்.

இன்று மாலை சுமார் 6 மணியளவில் கௌகாத்தியில் உள்ள சாருசஜாய் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள பாரம்பரிய போடோ கலாச்சார விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

போடோ சமூகத்தின் பழம்பெரும் பாரம்பரியத்தை போற்றும் வகையில் 23 மாவட்டங்களைச் சேர்ந்த அந்த சமூகத்தின் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கலைஞர்கள் ஒன்றுகூடி பகுரும்பா நடனத்தை நிகழ்த்த உள்ளனர்.

இயற்கையோடு ஒன்றிய தனித்துவமான நாட்டுப்புற நடனம் என்ற சிறப்பை இந்த பகுரும்பா நடனம் பெற்றுள்ளது. இது ஒரு பிரம்மாண்டமான கலாச்சார திருவிழாவாக இருக்கும்.

இதனைத் தொடர்ந்து நாளை காலை சுமார் 11 மணியளவில் கலியாபோர் நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி அவர்கள் சுமார் ரூ.6,950 கோடி மதிப்பிலான காசிரங்கா மேம்பால திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார்.

சுமார் 86 கி.மீ தூரம் நீளமுள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒன்றாக கலியாபோர் மற்றும் நுமலிகார் இடையே இது அமையவுள்ளது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அசாம் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / JANAKI RAM