தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு எம்.ஜி.ஆரின் பங்களிப்பு மகத்தானது - பிரதமர் மோடி புகழஞ்சலி
புதுடெல்லி, 17 ஜனவரி (ஹி.ச.) தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் இன்று தமிழில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறுகையில், எம்.ஜி.ஆர
தமிழக வளர்ச்சிக்கு  எம்.ஜி.ஆர் ஆற்றிய பங்கு சிறப்பானது - பிரதமர் மோடி புகழஞ்சலி


புதுடெல்லி, 17 ஜனவரி (ஹி.ச.)

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் இன்று தமிழில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறுகையில்,

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.

இதேபோன்று, அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது,

திரைப்பட திரையில் இருந்து அரசியல் மேடை வரை மக்கள் இதயங்களில் ஆட்சி செய்தார். அவருடைய வாழ்க்கை, அவருடைய முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஏழைகளுக்கு மரியாதைக்குரிய வாழ்க்கையை உறுதி செய்வதற்காக அவர் அயராது உழைத்தார்.

பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் லட்சியங்களை நிறைவேற்ற இன்று நாம் அனைவரும் பாடுபடுகிறோம். அவர் தரமான கல்வி மற்றும் சுகாதார பராமரிப்புக்காக பாடுபட்டார் என தெரிவித்து உள்ளார்.

அதனால்தான் சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர். அதனால்தான் இன்றும் கூட சமூகத்தின் ஏழை பிரிவினர் அவரை தங்கள் மிகச்சிறந்த தலைவர் என அழைக்கிறார்கள். பாரத ரத்னா எம்.ஜி.ஆருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Hindusthan Samachar / vidya.b