Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 17 ஜனவரி (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றான புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்
திருக்கோவிலில் கடந்த மாதம் 8-ஆம் தேதி அன்று கும்பாபிஷேகமானது நடைபெற்றது.
இதை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதனால், சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி
மாநில, மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம்
செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காணும் பொங்கல் நாளில் திருக்கோவில் ஏராளமானோர் வருகைதந்து சாமி
தரிசனம் மேற்கொள்வது வழக்கம். அதே போல், இன்று காணும் பொங்கலை ஒட்டி
திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில்
சினிமா துறையிலும், தனியார் நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தும் பவுன்சர்களை
கூட்டத்தை கட்டுப்படுத்திட பணியமர்த்தியது பெரும் அதிர்ச்சியையும், அதுவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிலில் பவுன்சர்களை பணியமர்த்தியது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இயல்பாகவே கோவில்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், காவல்துறையினர்களை தான் கோவில் நிர்வாகம் யன்படுத்தி வரும் நிலையில்,
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிலில் பவுன்சர்களை வைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் செயல் என்பது பக்தர்களிடம் அடக்குமுறையை கையாளும் நோக்கில் உள்ளதாக பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam