ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடக்கம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சேலம், 17 ஜனவரி (ஹி.ச.) இந்தியா முழுவதும் ரெயில் பயணத்தை விரைவு படுத்தும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்குவங்கம் ரங்காபானி- நாகர்கோவில் (வண்டி எண்.02603) இடையே வந்தே பா
ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை  இன்று முதல் தொடக்கம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு


சேலம், 17 ஜனவரி (ஹி.ச.)

இந்தியா முழுவதும் ரெயில் பயணத்தை விரைவு படுத்தும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்குவங்கம் ரங்காபானி- நாகர்கோவில் (வண்டி எண்.02603) இடையே வந்தே பாரத் ரெயில் இன்று (ஜனவரி 17) முதல் இயக்கப்படுகிறது.

அதன்படி மேற்குவங்கம் ரங்காபானி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (ஜனவரி 17) மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு நாளை மறுநாள் (ஜனவரி 19) காலை 8.56 மணிக்கு வந்து செல்லும்.

இந்த ரெயில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை வழியாக நாகர்கோவிலை இரவு 7.15 மணிக்கு சென்றடையும். மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b