பங்குச் சந்தைகள் பிப்‌ரவரி 1-ஆம் தேதி இயங்கும்
மும்பை, 17 ஜனவரி (ஹி.ச.) 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1, அன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான வழக்கமான தேதியாக பிப்ரவரி 1 மாறியுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான
பங்குச்சந்தை


மும்பை, 17 ஜனவரி (ஹி.ச.)

2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1, அன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான வழக்கமான தேதியாக பிப்ரவரி 1 மாறியுள்ளது.

2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டும் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

2026 பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தொடர்ச்சியான ஒன்பதாவது மத்திய பட்ஜெட் தாக்கலாக இருக்கும்.

இது ஒரு நிதியமைச்சரால் தடையின்றி தாக்கல் செய்யப்பட்ட மிக நீண்ட பட்ஜெட் காலங்களில் ஒன்றாக அமைகிறது.

இந்நிலையில், வரும் 1 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றைய தினத்தில் பங்குச்சந்தைகள் இயங்குமா? இல்லையா? என்பது பலருக்கும் சந்தேகமாக இருந்தது.

ஏனெனில் பங்குச்சந்தைகளுக்கு வழக்கமாக சனி, ஞாயிற்று கிழமைகளில் விடுமுறையாகும்.

இந்த நிலையில், பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ சந்தைகள் பிப்ரவரி 1ம் தேதி அன்று வழக்கம் போல இயங்கும் என பங்குச்சந்தைகள் அறிவித்துள்ளன.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், பங்குச்சந்தை பிப்ரவரி 1, 2026 அன்று, வழக்கமான நேரத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது காலை 9:15 முதல் மாலை 3:30 வரை இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam