Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)
சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் டெக்னாலஜி பிராண்டுகள் எல்லாமே, மெமரி சிப் விலையேற்றம் காரணமாக, தங்களுடைய தயாரிப்புகளோட விலையை உயர்த்துறதுல கண்ணும் கருத்துமா இருக்காங்களாம். 2026-க்கான விலை உயர்வை தீவிரமா யோசிச்சுட்டு இருக்காங்களாம்.
இந்த ரேஸ்ல கார்ல் பெய் தலைமையிலான நத்திங் கம்பெனியும் குதிக்கப்போகுதாம். அதாவது, 2026-ல வர்ற நத்திங் ஸ்மார்ட்போன்களோட விலை விண்ணைத்தொடும்னு நத்திங் கம்பெனி சொல்லியிருக்கு.
அதுமட்டுமில்லாம, நத்திங்கோட சி.இ.ஓ வேற என்ன சொல்லிருக்காருன்னா - நம்ம போட்டியாளர்களும் இதையேதான் செய்வாங்க, இல்லன்னா செலவை சமாளிக்க ஸ்மார்ட்போன்ல இருக்கற சில முக்கியமான அம்சங்களையே தூக்கிருவாங்கன்னு சொல்லிருக்காரு.
நத்திங்கோட சி.இ.ஓ-வான கார்ல் பெய், 2026-ல ஸ்மார்ட்போன் மார்க்கெட் எப்படி இருக்கப்போகுதுன்னு தன்னோட லிங்க்ட்இன் பக்கத்துல ஒரு பெரிய பதிவே போட்டுருக்காரு. பெரும்பாலான கம்பெனிகள் விலையை ஏத்த வாய்ப்பிருக்கு, அப்படி இல்லன்னா சில பிராண்டுகள் உற்பத்தி செலவை குறைக்கறதுக்காக ஸ்மார்ட்போன்ல ஸ்பெக்ஸ் அப்டேட்ஸ்லாம் கட் பண்ணிருவாங்கன்னு சொல்லிருக்காரு.
உங்க அடுத்த ஸ்மார்ட்போன் ஏன் காஸ்ட்லியா இருக்கப் போகுது?-ன்னு ஒரு தலைப்பு கொடுத்து, டெக் கம்பெனிகளுக்கு நத்திங் எப்படி ஒரு புது வழிய கண்டுபிடிக்கப்போகுதுன்னு பெய் தெளிவா சொல்லிருக்காரு.
சில நேரங்கள்ல, மெமரி சிப்போட விலை மூணு மடங்கு வரைக்கும் ஏறிடுச்சாம். தேவை அதிகமா இருக்கறதால சப்ளை பத்தாம இன்னும் விலை ஏற வாய்ப்பிருக்குன்னு சொல்லிருக்காரு.
ஸ்மார்ட்போன்ல ரொம்ப காஸ்ட்லியான உதிரி பாகங்கள்ல மெமரியும் ஒண்ணு. அது மட்டுமில்லாம வருஷாந்திரம் பொருட்கள்ல அதிக செலவு பண்ணுறதுலயும் இதுதான் டாப்புல இருக்கு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி 20 டாலருக்கும் குறைவா இருந்த மெமரி சிப், இந்த வருஷம் முடியறதுக்குள்ள 100 டாலரை தாண்டிடும்னு சொல்றாங்க.
அதுமட்டுமில்லாம, மத்த பிராண்டுகள்லாம் 30% வரைக்கும் விலையை ஏத்தலாம்னு ஒரு கட்டமைப்பு மாற்றம் நடக்க வாய்ப்பிருக்குன்னு அவர் சொல்லிருக்காரு. புது நத்திங் போன்கள் எல்லாம் பழைய மாடலை விட கண்டிப்பா அதிகமா விலை போகும். ஆனா எவ்ளோன்னு மட்டும் சொல்ல முடியாதுன்னு பெய் சொல்லிருக்காரு.
விரைவில் வரவிருக்கும் நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போன், மலிவு விலை சீரீஸ்ல முதல் முறையா UFS 3.1 டெக்னாலஜிய யூஸ் பண்ணப்போகுதாம். இதனால நத்திங்கோட உற்பத்தி செலவு இன்னும் அதிகமாகும். அதனால நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனோட விலை பட்ஜெட்டை தாண்டும்.
நத்திங் கம்பெனி எப்பவும் பயனர் அனுபவத்துல அதிக கவனம் செலுத்தும். அதனால மத்த கம்பெனிகள விட நாங்க ரியல் டிஃபரண்டா தெரிவோம்னு கார்ல் பெய் சொல்லிருக்காரு.
ஆனா ஆப்பிள், கூகுள், சாம்சங் மாதிரி நத்திங்கோட போட்டியாளர்கள் அதிகமான மக்களுக்கு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி பண்றதுனால நிறைய லாபம் பாக்குறாங்க.
ரேம் பற்றாக்குறை காரணமா ஸ்மார்ட்போன் விலை உயர்வது பத்தி ஒரு பெரிய கம்பெனில இருந்து இதுவரைக்கும் இப்படி ஒரு தெளிவான அறிக்கை வந்ததே இல்ல. வேற எந்த கம்பெனியும் இதைப் பத்தி எந்த கருத்தும் சொல்லல.
சத்தமில்லாம ஸ்மார்ட்போன் மற்றும் மத்த டிவைஸ்களோட விலையை ஏத்துறதுல மட்டும் தான் கவனம் செலுத்துறாங்க. மெமரி விலை உயர்வை பத்தி எல்லாருக்கும் தெரியும். அதனால் விளக்கம் எதற்கு என்று நினைத்து இருக்கலாம்.
Hindusthan Samachar / JANAKI RAM