அல்மாண்ட் கிட் சிரப் எனும் மருந்தில் எதிலீன் இனைகால் என்ற நச்சு வேதிப்பொருள் கண்டுபிடிப்பு - தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை
சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.) அல்மாண்ட் கிட் சிரப் (Almont-Kid Syrup) எனும் மருந்தில் எதிலீன் இனைகால் என்ற நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் பொது நலம் கருதி மருந்து குறித்த எச்சரிக்கை வெளியீட்டுள்
Dd


சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)

அல்மாண்ட் கிட் சிரப்

(Almont-Kid Syrup) எனும் மருந்தில் எதிலீன் இனைகால் என்ற நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் பொது நலம் கருதி மருந்து குறித்த எச்சரிக்கை வெளியீட்டுள்ளது.

பீகாரில் தயாரிக்கப்படும் எந்த வகை மருந்தில் எதிலீன் கிளைகால் என்ற நச்சுவேதிப்பொருள் கலப்படமானது கண்டறியப்பட்டுள்ளது.

நச்சு வேதிப்பொருள் சிறுநீரக செயலிழப்பு, மூளை, நுரையீரல், போன்ற வேறு உறுப்புகளையும் பாதிப்படையச்செய்து இறப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் இந்த மருந்தை உடனடியாக விற்பனையிலிருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

என்று எச்சரித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ