Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 17 ஜனவரி (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள வ.உ.சி இல்லம் என்கின்ற ஹோட்டலில் தங்கி இருந்த பிரபல ரவுடி கனகு என்ற கனகராஜ் உட்பட 4 பேர் சென்னை ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசாரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது, குற்றாலத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா வந்த பிரபல ரவுடி கனகு என்ற கனகராஜ் மற்றும் அவருடன் இருந்த சக நண்பர்களான கார்த்திக், சாபின், பிரகாஷ் உள்ளிட்ட 4 பேரையும் தற்போது சென்னை ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து சென்று கொண்டிருக்கும் நிலையில், பிரபல ரவுடி கனகு என்ற கனகராஜன் உயிருக்கு போலீசாரால் ஆபத்து உள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா அச்சம் தெரிவித்துள்ள நிலையில்,
இது தொடர்பாக கனகராஜின் வழக்கறிஞர் தேன்மொழி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக புகார் ஒன்றையும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN