Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 17 ஜனவரி (ஹி.ச.)
மலையையே சிவனாகவும் சிவனையே மலையாகவும் கருதும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் முக்கியமான திருவிழாக்களில் முதன்மையான திருவிழா திருக்கார்த்திகை தீபத் திருவிழா அதனைத் தொடர்ந்து தை மாதம் வரும் பொங்கல் திருவிழாவின் போது திருவூடல் விழா ஆகிய 2 விழாக்களும் முதன்மையான திருவிழாக்கள், குறிப்பாக இந்த 2 திருவிழாக்கள் முடிந்த பிறகு அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
திருக்கார்ததிகை தீபத் திருவிழா முடிந்தவுடன் அண்ணாமலையார் தனது குடும்பத்துடன் காட்சியளித்து கிரிவலம் வருவார், அதேப் போல் காணும் பொங்கலான இன்று அண்ணாமலையார் சிவனடியாரான பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்க தனியாக கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
அதன்படி நேற்று திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி, அண்ணாமலையார் தனது சிவனடியாரான பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்க தனிமையில் புறப்பட்டு சென்றதையடுத்து, பராசக்தியம்மன், அண்ணாமலையார் மீது ஊடல் கொண்டு கோவிலுக்கு சென்றார், கிரிவலம் சென்ற அண்ணாமலையார் உடலாகிய உண்ணாமுலை அம்மனுக்கு வழிநெடுகிலும் வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட ஆன்மீக பக்தர்கள் மண்டகபடி செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றவுடன் மறுவூடல் நடைபெறுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN