Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 17 ஜனவரி (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய் துறை சிறப்பு முகாம்கடந்த 2014 முதல் 2016 வரை இரண்டு ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்து வந்தது.
தற்போது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு 2025 மீண்டும் செயல்பாட்டில் வந்துள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் பெயில் பெற்று குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுப்பு காவலில் வைத்து பாராமரித்து அவர்கள் மீது உள்ள வழக்குகளை முடிக்க வைத்து அவர்கள் சொந்த நாட்டுக்கு கடத்தப்படுவர்.
வடக்கு மண்டலத்தை சேர்ந்த 10 மாவட்டங்களில் இருந்து காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்கள் 24 மணி நேரம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் செய்யாறு வட்டாட்சியர் மேற்பார்வையில் வருவாய் துறை சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
ரஷ்யன் 1, நைஜீரியா 3, செர்பியா 1, நேபாளம் 2 என மொத்தம் 7 பேர் சிறப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர்.
திருச்சி முகாமில் சிறை காவலர்கள் தங்களை கை ,கால்கள், முதுகு புறத்தில், அடித்ததை செய்யாறு காவல் அதிகாரிகளிடம் காண்பித்தனர்
எங்களுக்கு தனித்தனி அறைகள் உள்ளதா ,போதுமான வசதிகள் இருக்கிறதா, மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பீர்களா என இறங்கு போது வாக்குவாதம் செய்து, பின்னர் போலீசார் வந்து பாருங்கள் என பேசி உடமைகளுன் அழைத்து சென்றனர்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஏடிஎஸ்பி சீவனுபாண்டியன் தலைமையில் திருச்சி போலீசாரிடம் இருந்து 7 பேரை பெற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN