சென்னை - சந்திரகாச்சி இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடக்கம்
சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.) நவீன இந்தியாவின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, நாடு முழுவதும் ரயில் பயண நேரத்தை குறைக்கும் நோக்கத்தோடு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப
சந்திரகாச்சி - தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடக்கம்


சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)

நவீன இந்தியாவின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, நாடு முழுவதும் ரயில் பயண நேரத்தை குறைக்கும் நோக்கத்தோடு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது.

அம்ரித் பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம்.ஏ.சி. இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் அம்ரித் பாரத் ரெயிலானது ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது.

தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, நாகர்கோவில் - ஜல்பாய்குரி, தாம்பரம் - சந்திரகாச்சி இடையே அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் ஜல்பாய்குரி - திருச்சி மற்றும் ஜல்பாய்குரி- நாகர்கோவில் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை நேற்று (ஜனவரி 17) தொடங்கியது. இந்த நிலையில், சந்திரகாச்சி - தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை இன்று (ஜனவரி 18) தொடங்குகிறது.

இது குறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

சந்திரகாச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06108) (இன்று) 18ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். சந்திரகாச்சி - தாம்பரம் இடையிலான அம்ரித் பாரத் ரெயிலானது எழும்பூர், சூலூர்பேட்டை, நெல்லூர் வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b