தை அமாவாசை தினம் - தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றால அருவிகளில் குவிந்து வரும் கூட்டம்
தென்காசி, 18 ஜனவரி (ஹி.ச.) தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றால அருவிகளில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, மாதம் தோறும் அமாவாசை தினம் வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம்
Courtallam Aiyappa


தென்காசி, 18 ஜனவரி (ஹி.ச.)

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றால அருவிகளில் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக, மாதம் தோறும் அமாவாசை தினம் வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை ஆகிய 3 அமாவாசை தினங்களில் தங்களது முன்னோர்களை நினைத்து எள்ளும், எண்ணையும் இறைத்து சிறப்பு வழிபாடு நடத்துவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் விலகி நேர்மையான எண்ணங்கள் நமது வாழ்க்கையில் நடக்கும் என்ற ஐதீகம் உள்ள நிலையில், இந்த அம்மாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபாடு நடத்துவதற்காக அருவிகள் மற்றும் நீர் நிலைகளில் புனித நீராடி வழிபாடு நடத்துவது வழக்கம்.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய புனித தளமான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே தற்போது பொதுமக்கள் கூட்டம் என்பது அலை மோதி வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுமே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்து அருவிக்கரையில் வைத்து எள்ளும், எண்ணையும் படைத்து தங்களது முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN