Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவில் ஐஐடி-க்கள் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, ஐஐடி முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில், இன்று (ஜனவரி 18) சென்னை தரமணியில் உள்ள ஐஐடியில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி, இளையமைப்பாளரும் எம்பியுமான இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது,
ஐஐடி முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்தும், தொழில்நுட்பம் தொடர்பான இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்தது.
இன்று, உலக அளவில் 4வது பொருளாதார நாடு என்கிற நிலையை அடைந்துள்ளது. விரைவில் இந்தியா 3வது இடத்தை எட்டும். இந்தியாவின் ஏழ்மை 10 ஆண்டுகளுக்கு முன்பு 30 சதவீதம் பேர் ஏழ்மை நிலையில் இருந்தனர்.
இப்போது இந்த எண்ணிக்கை 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியா சுயசார்பு தொழில்நுட்பத்தை பின்பற்றி வருகிறது.
இந்தியாவில் ஐஐடிகள் 75 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. 75 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், கல்வியின் மூலமாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் ஆட்களை தான் நாம் தயார் செய்து வந்திருக்கிறோம்.
இனிமேல், நம் நாட்டுக்கு பயன்படும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும்.
இது ஒரு புறம் எனில் மறுபுறம் தமிழ்நாட்டின் நிலைமை வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மாணவர்கள் முன்னேறிய நிலையில் இருக்கிறார்கள். தமிழ்நாடு உயர்கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால். ஜி.இ.ஆர் அடிப்படையில் பார்த்தால், உயர் கல்வி செய்பவர்கள் தமிழ்நாட்டில் 50% அளவுக்கு குறைந்துள்ளது.
இது இந்திய சராசரியை விட விதை அதிகம். குறையும் முதலீடுகள் தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பொறியாளர்கள் பார்த்துவிட்டு வெளியே வருகிறார்கள். இந்தியாவின் மொத்த பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை 18 சதவீதத்தில் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள்.
நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக பிஎச்டி முடிக்கிறார்கள். இருப்பினும்.. கல்வியில் எத்தனை சாதனைகள் செய்தாலும்.. முதலீடுகளை ஈர்ப்பதை பொறுத்தவரையில் தமிழ்நாடு பின்னோக்கி சென்றுள்ளது. அறிவியல் படிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 30 சதவீதம் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடுகள் வந்தன. ஆனால், இப்போது இது 5 சதவீதமாக குறைந்துள்ளது. இவற்றுக்கு காரணம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் என்பது, போதுமான அளவில் இல்லை என்பதுதான்.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்கக்கூடிய 70% மாணவர்கள் அறிவியல் படிப்புகளிலும், 30% சதவீதமானவர்கள் கலை படிப்புகளிலும் சேர்கிறார்கள். ஆனால், இவர்கள் பள்ளி படிப்பை முடித்துவிட்டு.. கல்லூரிக்கு சேரும்போது கலை படிப்பில் 70% பேரும், அறிவியல் படிப்பில் 30% பேரும் சேர்கிறார்கள்.
இங்குதான் பிரச்சினை தொடங்குகிறது. மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உயர் கல்வியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் 2ம் வகுப்பு பாடங்களை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளனர். தமிழ்நாட்டு பொருத்தவரையில், 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும்.. தரமான கல்வி என்பது இல்லாத நிலையை இருக்கிறது. இதன் காரணமாகவே தரமான பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b