Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)
ஈரோடு மாவட்டத்தில 744 ஆண்டுகளுக்கு முன் நதிநீர் இணைப்புக்கு முன்னோடியாக பவானி ஆற்றில் தடுப்பணை கட்டி வாய்க்கால் வெட்டி பாசனவசதி ஏற்படுத்தி காலிங்கராயன் விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். இவர் ‘நதிநீர் இணைப்பின் முன்னோடி’ என போற்றப்படுகிறார்.
கொங்கு சமுதாயத்தில் சாந்தந்தை குலத்தில் பிறந்த சிற்றரசனான இவர்,744 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலிங்கராயன் வாய்க்கால் 1271-ஆம் ஆண்டு வெட்ட தொடங்கி 1282-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.91 கி.மீ நீளம் கொண்ட சுமார்.35,000 ஏக்கர் பாசனம் தரும் இந்த வாய்க்கால் பவானியில் தொடங்கி கொடுமுடியை அடுத்துள்ள ஆவுடையார் பாறையில் முடிவடைகிறது.
இந்த பாசன வாய்க்காலை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்த தினம் (தை மாதம்-5ம் தேதி) வாய்க்காலை வெட்டிய காலிங்கராயருக்கு நன்றி செலுத்தும் வகையில் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் நாளை ஜனவரி-19 திங்கள்கிழமை காலை 7 மணிமுதல் பொங்கல் வைத்தும்,மேலும் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து வாய்க்காலில் விட்டு வழிபாடு செய்ய உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு ராசா கோவில் அருகில் காலிங்கராயன் சிலை வைக்க நிலம் வாங்கப்பட்டு, அங்கு 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சிலையின் கீழ் பகுதியில் காலிங்கராயன் வரலாறு குறித்த நூல்கள் மற்றும் போட்டி தேர்வில் பங்குபெறுபவர்கள் பயன்படுத்தும் நூல்கள் அடங்கிய நூலகமும் காலிங்கராயன் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளோட்டில் நிறுவப்பட்டுள்ள காலிங்கராயனின் முழு உருவ வெண்கலச் சிலையை மற்றும் காலிங்கராயன் பெயரில் அமைக்கப்பட்ட நூலகத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 18) தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
Hindusthan Samachar / vidya.b