Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 18 ஜனவரி (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் வனப்பகுதியை அதிக அளவு கொண்ட மாவட்டம் என்பதால் இங்கு வன
விலங்குகளின் நடமாடும் அதிக அளவு காணப்படுகிறது.
குறிப்பாக சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை என பல்வேறு வன விலங்குகள் உணவு தேடி அடிக்கடி மக்கள் வாழும் பகுதிக்குள் வந்து விடுகின்றன. இதனால் சில
நேரங்களில் மனித வனவிலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலி ஆகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு உதகை அடுத்த முத்தொரை பாலடா எனும் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் சிறுத்தை ஒன்று இறை தேடி அலைவதை அங்கு
தங்கி இருந்த செவிலியர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ வை கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அப்பகுதி மக்கள் இரவு
நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.
மேலும் சிறுத்தை
நடமாட்டத்தை கண்காணித்து வன துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .
Hindusthan Samachar / GOKILA arumugam