சாகித்ய அகாதமி போன்ற புகழ்மிக்க கலாச்சார நிறுவனத்தை தனது காலடியில் மண்டியிடச்செய்யும் வேலையை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது - சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.) சாகித்ய அகாதமி போன்ற புகழ்மிக்க கலாச்சார நிறுவனத்தை மோடி அரசு தனது காலடியில் மண்டியிடச்செய்யும் வேலையை அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது என மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்ப
Suve


Te


சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)

சாகித்ய அகாதமி போன்ற புகழ்மிக்க கலாச்சார நிறுவனத்தை மோடி அரசு தனது காலடியில் மண்டியிடச்செய்யும் வேலையை அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது என மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தேசிய அளவில் தன்னாட்சி அமைப்புகளை சிதைக்கப்பட்டால் மாநிலங்கள் உரிய படைப்புகளை தேசம் முழுவதும் கவனம் பெறுவதைப் போன்று உயர்த்திப் பிடிக்கும். இது பன்மைத்தன்மையை காக்கும் பண்பாட்டு நடவடிக்கைக்கான மிகச்சிறந்த முன்னகர்வு எண்டி அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ