Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜனவரி (ஹி.ச)
வடசென்னை வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்
அந்த வகையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெரு மற்றும் அண்ணா பிள்ளை தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு மையம், 700 அடுக்குமாடி குடியிருப்புகள், விளையாட்டுத் திடல், மாநகராட்சி அச்சகம் மற்றும் சமுதாய நலக்கூடம் என ஒருங்கிணைந்த வளாகத்தை ஆய்வு செய்தார்
சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் மூலக்கொத்தளம் விளையாட்டு அரங்கம், தங்கசாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின்பொழுது சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், சி.எம்.டி.ஏ சிஇஓ சிவஞானம்,சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் மற்றும் பலர் உடன் இருந்தனர்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் சேகர் பாபு,
வடசென்னை வளர்ச்சி திட்டம் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் எடுத்துக்கொண்ட பணிகளில் தேர்தலுக்கு முன்பாக 40 திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஸ்டான்லி மருத்துவமனை எதிரே கட்டப்பட்டு உள்ள 770 குடியிருப்புகள் கொண்ட வீடுகள் முதல்வர் அவர்களால் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது என கூறிய அவர் சென்னையில் செயல்படுகின்ற 57 மூத்தோர் குடியிருப்புகளையும் மேம்படுத்தவும் தினசரி வழங்கப்படும் உணவுப் படியை உயர்த்துவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி சிந்தனையில் ஏதாவது இருந்தால் தானே புதிய சிந்தனைகள் வெளியே வரும் சிந்திக்க முடியும், சிந்தையில் ஒன்றுமே இல்லை திமுக எதையெல்லாம் முன்னெடுக்கிறதோ அதை பின்தொடர்ந்து வந்து 10 சதவீதத்தை கூடுதல் ஆக்குவது தான் அதிமுகவின் பணி, தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என கூறினார்
பேரு பெத்த பேரு, தாக நீலு லேது' என்ற தெலுங்கு பழமொழி திமுக தேர்தல் வாக்குறுதிகளுக்கு பொருந்தும் என்ற அண்ணாமலை பேசியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு,
சாப்பிட சாப்பாடு இல்லை மீசைக்கு எதற்கு ஜாம்பவான் என்று தெலுங்கு பழமொழியை தெலுங்கில் மேற்கோள் காட்டியதோடு எந்தவிதமான பதவியும் இல்லாத அண்ணாமலை இது போன்ற கேள்விகளைக் கேட்க தகுதியை வளர்த்துக் கொள்ளட்டும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ