Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 ஜனவரி (ஹி.ச.)
2026-27ம் கல்வியாண்டின் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர்வதற்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் மார்ச் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதை தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பின்னர் கால அவகாசம் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதுசார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது nchm@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b