Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23ஆம் தேதி அன்று தமிழகம் வர உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தல் பயிலரங்கம் தொடர்பாக சென்னை தி. நகர் கமலாலயத்தில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது:
23ம் தேதி பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சாரத்தை மதுராந்தகத்தில் தொடங்கி வைக்கிறார். பிற்பகலில் கூட்டத்தில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என முதல் பிரச்சார கூட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
டிடிவி இணைவாரா? தேமுதிக இணையுமா என்பதெல்லாம் 23-ம் தேதி தெரிய வரும். கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் அந்த மேடையில் இடம் பெறுவார்கள்.
கடந்த தேர்தலில் 1500 ரூபாய் தரப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இப்போது 2000 என அறிவித்திருக்கிறார். இதை எப்படி காப்பி என சொல்ல முடியும். இது சரியாக இருக்காது.
மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி மறுக்கவில்லை. சில விளக்கங்களை கேட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam