Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 18 ஜனவரி (ஹி.ச)
அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.
பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டும் , ஞாயிற்றுக்கிழமை நாளான இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்களின் கூட்டம் பழனி மலைக் கோயிலுக்கு செல்ல அலைமோதி வருகின்றனர்.
தைப்பூசம் கொடியேற்றம் இன்னும் ஏழு நாட்கள் உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆக வருகை தந்த வண்ணம் உள்ளனர் . கிரி வீதி பாதைகளில் காவடி எடுத்து பக்தர்கள் அரோகரா கோசத்துடன் ஆடி பாடி வந்த வண்ணம் உள்ளனர்.
கூட்டம் அதிகம் உள்ள காரணத்தால் மலைக் கோயிலுக்கு செல்ல குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக செல்லவும் ,கீழே இறங்கி வர படிப்பாதை வழியாக என ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த பழனி டிஎஸ்பி தனஜெயம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN