Enter your Email Address to subscribe to our newsletters

ஆரணி, 18 ஜனவரி (ஹி.ச.)
ஆரணி பகுதிகளுக்கு பொங்கல் விழாவை கொண்டாட வந்த பொதுமக்களுக்கு மீண்டும் சென்னை செல்ல போதிய அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்தோடு பேருந்துநிலையத்தில் நீண்டநேரமாக காத்திருந்ததால் அரசு போக்குவரத்து பணிமனை அலுவலகத்தை முற்றுகையிட்டு பேருந்துகளுக்கு கால்கடுக்க காத்திருந்தனர்.
கடந்த நான்குநாட்கள் தமிழரின் பாரம்பரையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தங்கி பல்றேு பணிகளை மேற்கொண்டுவரும் பொதுமக்கள் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு வந்து விழாவை கொண்டாடி மீண்டும் சென்னைக்கு செல்ல இன்று காலை முதலே இருந்து தற்போது மாலைவரையில் போதிய அரசு பேருந்துக்கள் மற்றும் தனியார் பேருந்துக்கள் என மிக குறைவாக இருந்ததால் பயனிகள் நீண்டநேரமாக பேருந்து நிலையங்களில் காத்திருந்தன.
மேலும் பல்வேறு பயனியர்கள் ஆரணி அரசு பணிமனை அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு பேருந்துக்காக காத்திருந்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் பயனிகளிடம் சமரசம் ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J