Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 ஜனவரி (ஹி.ச.)
புதுடில்லி மாநகரின் இதயமாக திகழும் ஜனாதிபதி இல்லத்தை, ஆர்வமுள்ள பொது மக்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மாளிகையின் சர்க்யூட்-1 வழித்தடத்தில் பயணித்து, பிரதான கட்டிடத்தின் எழிலை அனைவரும் சுற்றிப் பார்த்து ரசிக்கலாம்.
இந்நிலையில், தேசத்தின் பெருவிழாவான குடியரசு தினத்தை முன்னிட்டு கர்தவ்யா பாதையில் கம்பீரமான ராணுவ அணிவகுப்பு நடைபெற இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, ஜனவரி 29-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவாக ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள விஜய் சௌக் பகுதியில் இந்திய ராணுவத்தின் பின்வாங்கும் இசை முழக்க நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.
ஆகவே, பாதுகாப்பு கருதி ஜனவரி 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஜனாதிபதி மாளிகைக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM