Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 18 ஜனவரி (ஹி.ச.)
தலைநகர் டெல்லியிலிருந்து பீகார் மாநிலத்தின் பாட்னா நகரை நோக்கி தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது.
அப்போது, ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம நபர் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நேற்று இரவு அந்த ரயிலில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினர் முழுமையான சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் மண்டல அளவிலான அதிகாரிகள் எனப் பலரும் ரயிலில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த வெடிகுண்டு சோதனை நீடித்தது.
எனினும், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. சந்தேகத்திற்குரிய எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.
இதையடுத்து, 31 நிமிடங்களுக்கு பிறகு ரயில் தனது பயணத்தை பாதுகாப்பாக தொடர்ந்தது.
Hindusthan Samachar / JANAKI RAM