ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம்
ராமேஸ்வரம், 18 ஜனவரி (ஹி.ச.) ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் வரக்கூடிய பக்தர்கள் மாதந்தோறும் வருகின்ற அமாவாசை தினங்களில் தங்களோடு வாழ்ந்து மறைந
அக்னி தீர்த்த கடற்கரை


ராமேஸ்வரம், 18 ஜனவரி (ஹி.ச.)

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் வரக்கூடிய பக்தர்கள் மாதந்தோறும் வருகின்ற அமாவாசை தினங்களில் தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அம்மாவாசை நாட்களிலேயே சிறப்பு வாய்ந்த அமாவாசையாக ஆடி, தை, மகாலய அமாவாசை பார்க்கப்படுகிறது

தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம் இதன் காரணமாக அதிகாலை முதல் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்திவிட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சுவாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர்.

மேலும் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்றச்செயலும் நடைபெறாமல் இருப்பதற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு ரத வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாது சிசிடிவி கேமராக்கள் மூலமும் பக்தர்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam