Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 18 ஜனவரி (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் சசிகலா.
சசிகலாவும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாண்டியின் வீட்டார், சசிகலாவை பெண் கேட்ட பொழுது தர மறுத்து உறவினரான முருகன் என்பவருக்கு சசிகலாவை திருமணம் முடித்துக் கொடுத்துள்ளனர்.
சசிகலா-முருகன் தம்பதியினருக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த சூழ்நிலையில் காதலர் பாண்டி மற்றும் சசிகலாவின் காதல் அவ்வப்போது செல்போன் மூலம் தொடர்ந்து உள்ளது.
காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் சசிகலாவின் கணவர் முருகன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றிருந்த நிலையில் பாண்டியுடன் சசிகலா தலைமறைவாகிவிட்டாராம்.
சசிகலாவின் தந்தை கண்ணனின் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாண்டியிடம் இருந்த சசிகலாவை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சசிக்கலாவின் தந்தை கண்ணன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று திடீரென சசிகலா தன்னுடைய தந்தையின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த உச்சிப்புளி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வரும் நிலையில், காதலி சசிகலா தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்த ஓட்டுனரான பாண்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்று இருந்த நிலையில், அங்கேயே ஒரு இடத்தில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதலி இறந்த துக்கம் தாளாமல் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN