Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 18 ஜனவரி (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, சிவராத்திரி, நவராத்திரி ஆகியவை முக்கிய திருவிழாக்கள் ஆகும். சதுரகிரி மலையில் அகஸ்தியர், போகர், கோரக்கர் உள்ளிட்ட 18 சித்தர்களும் தங்கி தவம் புரிந்து மலைப்பகுதி. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
சதுரகிரி மலைக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் 5.5 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான மலைப்பாதை வழியாக நடந்து செல்ல வேண்டும்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரதசித்தி பெற்ற தை அமாவாசையைமுன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையில் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்தனர். பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தை அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த தை அமாவாசை சிறப்பு பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கோவில் நிர்வாகத்தின் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தை அமாவாசைக்கான அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் செய்துள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார், வனத்துறையினர், நீர் ஓடை பகுதிகளில் தீயணைப்புத்துறையினர் என 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam