பெண் காவலரை கழிவறையில் செல்போனில் வீடியோ எடுத்த எஸ்எஸ்ஐ கைது!
ராமநாதபுரம், 18 ஜனவரி (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனின் மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்கு முதல்வர் நேற்று வருகை தந்தார். அப்போது மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்ப
Arrest


ராமநாதபுரம், 18 ஜனவரி (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனின் மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்கு முதல்வர் நேற்று வருகை தந்தார். அப்போது மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதல்வரின் வருகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெண் காவலர்கள் உட்பட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட படுத்திருந்தனர். அப்போது பரமக்குடி மணி நகர் சோதனை சாவடியில் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டி என்பவருக்கும் பணி ஒதுக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு தஞ்சாவூர் பகுதியில் இருந்து வந்த பெண் காவலர்கள் பணியில் இருந்தனர். பெண் காவலர்கள் கழிவறைக்கு சென்று திரும்பியபோது வீடியோ பதிவாகி கொண்டிருந்த நிலையில் கழிவறையில் இருந்து ஒரு செல்போனை எடுத்துள்ளனர்.

அந்த செல்போன் எஸ் எஸ் ஐ முத்துப்பாண்டியின் செல்போன் என்பதும் அதில் பெண் காவலர்கள் கழிவறையில் இருக்கும் போது வீடியோ ரெக்கார்ட் செய்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து பெண் காவலரின் புகாரின் பேரில் எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டி மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டியை கைது செய்து ராமநாதபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

முதல்வரின் பாதுகாப்புக்கு வருகை தந்த பெண் காவலரை கழிவறையில் செல்போனில் வீடியோ எடுத்த எஸ் எஸ் ஐ கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN