Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் விளையாட உள்ளது.
இந்த ஆட்டங்கள் நாக்பூர் (ஜனவரி 21), ராய்ப்பூர் (ஜனவரி 23), கவுகாத்தி (ஜனவரி 26), விசாகப்பட்டினம் (ஜனவரி 28), மற்றும் திருவனந்தபுரத்தில் (ஜனவரி 31) நடைபெற உள்ளன.
இதற்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த திலக் வர்மாவுக்கு (விதைப்பை) அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆகையால், அவருக்கு பதிலாக முதல் மூன்று ஆட்டங்களுக்கு ஷ்ரேயஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
'ஆல் ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தருக்கு, இடது கீழ் விலா பகுதியில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரவி பிஷ்னோய் வாய்ப்பு பெற்றுள்ளார்.
அணியின் விவரம்:
சூர்யகுமார் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷான், ரவி பிஷ்னோய்.
Hindusthan Samachar / JANAKI RAM