Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பரங்குன்றம், 18 ஜனவரி (ஹி.ச.)
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது.
இங்கு தை மாத மகாளய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு இறந்த தங்கள் குடும்ப முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் பிதுர் தர்ப்பணம் செய்தனர்.
இதன் மூலம் இறந்த தங்களின் முன்னோரின் ஆத்மா சாத்தியடைந்து அவர்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சரவண பொய்கையில் ஏராளமானோர் பிதுர் தர்ப்பணம் செய்தனர்.
Hindusthan Samachar / Durai.J