Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி , 18 ஜனவரி (ஹி.ச.)
பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை (ஜனவரி19) மின்தடை ஏற்படவுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தாழையூத்து துணை மின் நிலையத்தில் நாளை (19.1.2026, திங்கள்கிழமை) மின்வாரிய மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம்,மதவகுறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b