பள்ளி மாணவி மீது சொகுசு கார் மோதி விபத்து
கேரளா, 18 ஜனவரி (ஹி.ச.) கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட எலமக்கரா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி அதே பகுதியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று தீஷிதா பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமா
விபத்து


கேரளா, 18 ஜனவரி (ஹி.ச.)

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட எலமக்கரா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி அதே பகுதியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று தீஷிதா

பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக

வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று மாணவி மீது மோதி விபத்தை ஏற்படுத்தி

அங்கிருந்து கார் ஓட்டுநர் தப்பி சென்றுள்ளார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர்

மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் தற்போது படுகாயம் அடைந்த மாணவி தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை

பெற்று வருகிறார்.

இந்த காட்சிகள் அந்த சந்திப்பில் பொருத்தப்பட்டிருந்த

கேமராவில் பதிவான நிலையில் தற்போது வெளியாகி உள்ளது.

இது குறித்து போலீசார்

வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பி சென்ற கார் ஓட்டுநரை

தீவிரமாக தேடி வருகின்றனர்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam