Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 19 ஜனவரி (ஹி.ச.)
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுமானத்திற்காக ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த முக்கியமான திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் நீதிமன்ற வளாகம் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந் நிகழ்வில் வழக்கறிஞர்கள் சி.சின்னத்தம்பி, த.ஆ.கதிரவன், எம்.ராஜா, ஜெ.கணேசன், எம்.பாலமுருகன், பொன்.செல்வம், மகேந்திரன், அன்பரசன், நூர்தீன் ராஜா, சி.பாலாஜி, பரமேஸ்வரன், இராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ