சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை
சென்னை, 19 ஜனவரி (ஹி.ச) சென்னை மயிலாப்பூர் பி.வி.கோவில் தெருவை சேர்ந்த ஜெய பூஜா (19 வயது) எனும் கல்லூரி மாணவி ராணிமேரி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில்
சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை


சென்னை, 19 ஜனவரி (ஹி.ச)

சென்னை மயிலாப்பூர் பி.வி.கோவில் தெருவை சேர்ந்த ஜெய பூஜா (19 வயது) எனும் கல்லூரி மாணவி ராணிமேரி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், நேற்று முன் தினம் இரவு ஜெய பூஜாவின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டுள்ளனர். ஆனால், ஜெய பூஜா மட்டும் ஓட்டலில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த ஜெய பூஜா, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b