நாளை தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.) தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் ஜனவரி 20ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தம
ஜனவரி 20ம் தேதி தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம்


சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் ஜனவரி 20ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்தப்பணிகள், காங்கிரஸ் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டெ, நிவேதித் ஆல்வா உள்பட பலர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b