Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜனவரி (ஹி.ச.)
போலந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்பயணத்திற்காக கடந்த 17ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்த அவரை, புது டெல்லியில் கூடுதல் செயலர் திருமதி பூஜா கபூர் அவர்கள் கனிவுடன் வரவேற்றார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ரம்மியமான ஜெய்ப்பூர் நகரத்திற்கு வருகை தந்த அவர், நேற்று அங்கு நடந்த ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தார். இந்நிலையில், இன்று விடியற்காலையில் அவர் தலைநகர் டெல்லியை அடைந்துள்ளார்.
புது டெல்லியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை இன்று நேரில் சந்தித்து பல விஷயங்கள் குறித்து உரையாட உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவிற்கும் போலந்துக்கும் இடையேயான ராஜதந்திர உறவு மற்றும் இருதரப்பு நல்லெண்ண விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் அவர் உரையாற்றியபோது, ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் ஐரோப்பிய கண்டத்தையே ஒரு நெருக்கடியான நிலைக்கு தள்ளியுள்ளது என்றும், ஐரோப்பாவின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் குலைந்து போயுள்ளதென்றும் கவலையுடன் குறிப்பிட்டார்.
மேலும், போலந்து தேசம் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.7% நிதியை தேச பாதுகாப்பிற்காக ஒதுக்குகிறது என்றும், ஐரோப்பிய பாதுகாப்பிற்காக நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருப்போம் என்றும் கூறினார்.
இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போலந்து துணை பிரதமரின் இந்த வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருடனான சந்திப்புக்குப் பிறகு, உயர்திரு சிகோர்ஸ்கி அவர்கள் இன்று போலந்துக்கு இன்று புறப்பட்டு செல்வார்.
Hindusthan Samachar / JANAKI RAM