Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 19 ஜனவரி (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டத்தில் சாலப்பாளையம் பகுதியில் வரும் 27-ஆம் தேதி
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வேலைப்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் போட்டி நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சியினரை சந்தித்து விழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பிலும் பாஜக சார்பில் அண்ணாமலை மற்றும்
முருகன் போன்ற முக்கிய கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை முன் பதிவு செய்வதற்கு இணைய வழியாக டோக்கன் வழங்கப்படும் என்று மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தை தெரிவித்திருந்த
நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிக்கட்டு பேரவை மற்றும்
கோட்டாட்சியரும் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது பேச்சுவார்த்தை தோல்வி
அடைந்தது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சேர்ந்தவர்கள் விழாக்குழுவினர் இணைந்து ஆட்சியர் அலுவகத்தில் சுமார் 100 மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் 700 டோக்கன்கள் தருவதாகவும் 300 டோக்கன்கள் மேனுவல் ஆக கொடுக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாலப்பாளையம் ஜல்லிக்கட்டு குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டி
நடத்துவதற்கான அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்படுத்தி தயார் செய்து நடத்துவதற்கான அனைத்து வேலைகளும் செய்து வரும் நிலையில் காளைகளை அவிழ்த்து
விடுவதற்கான டோக்கன்கள் மாவட்ட நிர்வாகம் ஆன்லைன் மூலமாக வழங்குவது எதிர்ப்பு
தெரிவிக்கிறோம் என்றும் தொடர்ந்து இணைய ஒளி வழியாக வழங்கும் டோக்கன்களை
கொடுப்பதாக இருந்தால் ஜல்லிக்கட்டை நாங்கள் நடத்த விரும்பவில்லை என்றும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியரிடம் மனு அளித்தனர்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சியின் கூட்டணி தலைவர்கள் முக்கியமாக வரும் சூழ்நிலையில் தற்போது இணைய வழி
டோக்கன்கள் வழங்குவது சம்பந்தமாக ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது.
தற்போது எருமப்பட்டி சாலப்பாளையம் பகுதி சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்கள் ஜல்லிக்கட்டு பேரவை அமைப்பினர் விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியில் அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து திடீர் தர்மபுரி ஈடுபட்டு வருவதால் தற்போது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த பேச்சுவார்த்தையில்
ஜல்லிக்கட்டு போட்டிக்கான முழுக்க முழுக்க பதிவுகள் ஆனது காளைகளின் பதிவானது இணைய வழியாக மட்டுமே பதிவு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam