கணவன் மனைவி தகராறு -தட்டிக் கேட்க வந்தவர்களை வீட்டில் அடைத்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதால் பரபரப்பு
ஈரோடு, 19 ஜனவரி (ஹி.ச.) கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஆண்டவர்மலையை சேர்ந்தவர் கோபிநாத் இவருக்கு பிருந்தா என்ற மனைவி இருமகள்களுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் கோபிநாத் நேற்று இரவு வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி ப
துப்பாக்கி


ஈரோடு, 19 ஜனவரி (ஹி.ச.)

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஆண்டவர்மலையை சேர்ந்தவர் கோபிநாத் இவருக்கு

பிருந்தா என்ற மனைவி இருமகள்களுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் கோபிநாத் நேற்று இரவு வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அவரது மனைவி

பிருந்தாவுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் மனமுடைந்த அவரது மனைவி

பிருந்தா கணவர் தகராறில் ஈடுபட்டது குறித்து அவரது தாய் தந்தை மற்றும் அவரது சகோதரர் தினேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

உடனே அவரது தாய் தந்தை அவரது சகோதர் ஆகியோர் ஆண்டவர் மலையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு விரைந்து வந்து கோபிநாத்திடம் ஏன் தனது மகள் பிருந்தாவிடம்

தகராறில் ஈடுபட்டு வருகிறீர்கள் என கேட்டபோது கோபிநாத்திற்கும் பிருத்தாவின்

சகோதரர் தினேஷ் குமாருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த

கோபிநாத் வீட்டை விட்டு வெளியே வந்து அவரது மனைவி மகள்கள் மாமனா் உள்ளிட்ட அனைவரையும் வீட்டில் அடைத்து பூட்டி விட்டு வெளியே வந்து இரட்டைகுழல் தூக்கியை

எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத்தின்

மனைவியின் சகோதரர் தினேஷ்குமார் காவல்துறையின் அவசரஉதவி எண்ணான 100அழைத்து

புகார் தெரிவித்துள்ளார்.

உடனே இதுகுறித்து நம்பியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ

இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி கோபிநாத்திடம்

இருந்த துப்பாக்கி உரிமம் பெற்ற இரட்டைக் குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்து காவல்நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam