Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த 'காட்டாளன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமான கொண்டாட்டமாக மாறியது.
ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.
கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்வில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் ரசிகர்களும், ஊடகத்தினரும், விருந்தினர்களும் கலந்து கொண்டனர். டீசருக்கு ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதிரடியான ஆக்சன் காட்சிகளால் நிரம்பிய இந்த டீசர்- ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவிற்கு திரில் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.
இதுவரை கண்டிராத வகையில் பிரமிக்கத்தக்க வைக்கும் சண்டை காட்சிகள் இப்படத்தின் தனி சிறப்பாக இருக்கும் என்பதையும் இந்த டீசர் உணர்த்துகிறது.
இந்த டீசரில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸ் அடர்ந்த வனத்தில் ஒரு யானையுடன் மோதும் காட்சிகள் நம்ப முடியாத வகையில் யதார்த்தத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் காட்சிகள் வி எஃப் எக்ஸ் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல்,ஒரு உண்மையான யானையை கொண்டு படமாக்கப்பட்டவை என்பதை மறுப்பு அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.
இந்த கதாபாத்திரம் ஆண்டனி வர்கீஸின் திரையுலக பயணத்தில் சக்தி வாய்ந்த- மாசான கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'காட்டாளன்' திரைப்படம் எதிர் வரும் மே மாதம் 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடுகளில் இப்படமும் ஒன்றாக இருக்கும். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார்.
'ஓங்-பாக்' தொடரில் பணியாற்றியதற்காக சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளரான கெச்சா கம்பாக்டீ மற்றும் அவரது குழுவினரின் தலைமையில் தாய்லாந்தில் சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
'ஓங் -பாங்' படங்கள் மூலம் பிரபலமான பாங் என்ற யானையும், 'காட்டாளன்' திரைப்படத்தில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது.
டீசரில் காணப்படும் யானை சண்டை காட்சிகள் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
' காந்தாரா' மற்றும் 'மகாராஜா' போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் தென்னிந்திய படங்கள் மூலம் புகழ்பெற்ற பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இசை - இந்த திரைப்படத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
சர்வதேச அளவிலான சினிமாவிற்கு இணையான காட்சி அமைப்பு - ஆக்சன் மற்றும் இசையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் - ஒரு முழுமையான மாஸ் ஆக்சன் திரில்லராக இருக்கும் என்று உறுதி அளிக்கிறது.
'காட்டாளன்' திரைப்படம் ஏற்கனவே மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளில் வெளியிடப்படுவதற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே வெளியீட்டுக்கான முந்தைய சாதனைகளையும் முறியடித்துள்ளது.
ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு மலையாள திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் வெளிநாடுகளில் வெளியிடுவதற்கு 'காட்டாளன்' தயாராகி வருகிறது.
அகில இந்திய பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான 'மார்கோ ' படத்திற்குப் பிறகு கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் இதுவாகும். முன்னதாக ஆண்டனி வர்கீஸ் ஸ்டைலான மாஸ் தோற்றத்தில் தோன்றும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஒரு பான் இந்திய படைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் தெலுங்கு நட்சத்திர நடிகர் சுனில், கபீர் துஹான் சிங், 'புஷ்பா' புகழ் தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாஜ் , பாலிவுட் நடிகர் பார்த் திவாரி மற்றும் மலையாள திரையுலகை சார்ந்த ஜெகதீஷ், சித்திக் , வ்ளாகர் - பாடகர் ஹனன்ஷா, ராப்பர் பேபி ஜீன், ஹிப்ஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
திரைக்கதையை ஜோபி வர்கீஸ்- பால் ஜார்ஜ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை உன்னி .ஆர் எழுதியுள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Hindusthan Samachar / Durai.J