Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 19 ஜனவரி (ஹி.ச.)
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் முடிந்து தை ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் ஆற்றுத் திருவிழா, கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்றது.
இந்த ஆற்று திருவிழாவில் அக்னி திருத்தலம் என அழைக்கப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இருந்து அண்ணாமலை மற்றும் உண்ணாமலை அம்மன் தென்பெண்ணை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்த ஆற்று திருவிழாவை காண மணலூர்பேட்டை மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடியிருந்தனர்.
மாவட்ட காவல்துறையின் சார்பில் 200க்கும் மேற்பட்ட போலீசார் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை வரை நடைபெறும் இந்த ஆற்று திருவிழாவிற்கு பின்னர் அண்ணாமலையார் மணலூர்பேட்டை மாட வீதிகள் வழியாக சுற்றி வந்து பின்னர் மீண்டும் திருவண்ணாமலைக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும்.
மேலும் இவ்விழாவில் மணலூர்பேட்டை ஸ்ரீ பிரயோக வரதராஜ பெருமாள் மணலூர்பேட்டை, ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மணலூர்பேட்டை, மாவடி விநாயகர் மணலூர்பேட்டை, கங்கை அம்மன் மணலூர்பேட்டை, மாரியம்மன் மணலூர்பேட்டை, லட்சுமி நாராயண பெருமாள் சித்தப்பட்டிணம், அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்
சித்தபட்டினம் ,காக்கதீ ஈஸ்வரர் மணலூர்பேட்டை ஆகிய சுவாமிகளுக்கு விழாவில் கலந்துகொண்டு தீர்த்தவர் நிகழ்ச்சி நடைபெற்றது.
Hindusthan Samachar / ANANDHAN