மணலி ஏரியில் அதிவேக படகுகளால் வீணாக வெளியேறும் தண்ணீர் - மதகு அமைக்க கோரிக்கை
சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.) சென்னை மாவட்டம் உள்ள மணலி ஏரியானது வடக்கே - சின்னமாத்துார் சாலை,மேற்கே மாத்துார், கிழக்கே புதிய எம்.ஜி.ஆர். நகர், தெற்கே காமராஜர் சாலை ஆகிய எல்லைகளை கொண்டு, செவ்வக வடிவில், 29 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி 1.
மணலி ஏரியில் அதிவேக படகுகளால் வீணாக வெளியேறும் தண்ணீர் - மதகு அமைக்க கோரிக்கை


சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)

சென்னை மாவட்டம் உள்ள மணலி ஏரியானது வடக்கே - சின்னமாத்துார் சாலை,மேற்கே மாத்துார், கிழக்கே புதிய எம்.ஜி.ஆர். நகர், தெற்கே காமராஜர் சாலை ஆகிய எல்லைகளை கொண்டு, செவ்வக வடிவில், 29 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இந்த ஏரி 1.2 மீட்டர் ஆழத்தில், 4 லட்சம் கன அடி நீர் தேக்கும் வகையில் இருந்தது. இதை, 10.41 கோடி ரூபாயில் நான்கு மீட்டர் ஆழப்படுத்தி, 12 லட்சம் கன அடி நீர்

இ ருப்பு வைக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டது. மேலும், ஏரியில் படகு குழாம் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாட்டர் ஸ்கூட்டர் போன்று அதிவேகமாக இயக்கப்படும் படகுகளால், ஏரி நீர் தழும்பி, கரையை விட தாழ்வாக உள்ள கலங்கல் வழியாக வீணாக வெளியேறி, சில மீட்டர் துாரம் போக்கு கால்வாய் வழியாக பயணித்து, புழல் உபரி கால்வாயில் கலந்து வருகிறது. நான்கு நாட்களில், ஒரு அடிக்கும் மேல் தண்ணீர் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் பொருட்டு, கலங்கலில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. படகு போக்குவரத்தால், அவை உடைந்து கலங்கலின் வடிகாலில் விழுந்து விட்டது.

தற்காலிக தீர்வாக, மீண்டும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அதிகாரிகள் கவனித்து, நிரந்தர தீர்வாக, எளிதில் திறந்து மூடும், திருகு வடிவிலான மதகு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையில், ஏரியில் இருந்து கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் பொருட்டு, மதகு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அமைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b