Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 19 ஜனவரி (ஹி.ச.)
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் அச்சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட விவசாயிகள் 11 பேரை பொங்கல் தினத்தன்று தாராபுரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அவர்களை கோழிப்பண்ணை முதலாளிகள் தூண்டுதல் பெயரில் காவல்துறையினர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN